தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நேற்று முன் தினம் ஓய்வடைந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முதல் முறை வாக்காளர்கள் எண்ணிக்கை 10.92 லட்சம் பேர் உள்ளனர். 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 3.32 லட்சம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்காக 1,58,568 மின்னணு வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வமுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…