தமிழ்நாடு

ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை – கெத்து காட்டிய தாய்மாமன்

ஆவடி அருகே மாட்டு வண்டியில் சீர்வரிசை பொருட்களை எடுத்து வந்து அனைவரையும் திரும்பி பார்க்க செய்த தாய்மான்.

தமிழகத்தில் தாய்மாமன் சீர்வரிசை  கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது.  உறவு முறைகளில் பெற்ற தாய்க்கு கொடுக்கும்  முக்கியத்துவத்தில் சிறிதும் குறைவு இல்லாமல் தாய் கூட பிறந்த தாய் மாமனுக்கும் முக்கியத்துவம் தரப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சென்னை ஆவடி அருகே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த கலைவாணன்- அபிராமி ஆகியோரின் மகள் ஹர்ஷிகாவின் பூப்புனித நீராட்டு விழா நடைபெற்றது. அந்த பூப்புனித நீராட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தடபுடலாக செய்யப்பட்டது. விழாவிற்கு வருபவர்களுக்கு பிரியாணி உள்ளிட்ட சிறப்பு உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் முக்கிய பங்கு வகிக்கும் தாய்மாமன் அபிலேஷின் சீர் வரிசை.  அபிலேஷின் வீட்டில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் மாட்டுவண்டிகளிலும், பெண்கள் கையில் தட்டுகள் ஏந்தியும் சீர் வரிசைகளை கொண்டு சென்றார்.

வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை வழியாக ஊர்வலமாக விழா மேடைக்கு சீர் வரிசைகளை கொண்டு சென்றது எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

மேலும் நகைகள், புத்தாடைகள், மா,பலா,வாழை, மாதுளை, திராட்சை, உள்ளிட்ட பழவகைகளும், அனைத்து வகை மிட்டாய்கள், அரிசி, பருப்பு மற்றும் இனிப்பு வகைகள் என சுமார் 100 வகைகளில் சீர் கொண்டு வந்தனர்.

முடிந்தவரை தங்கள் கைகளில் சுமந்தும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் மாட்டு வண்டியிலும் கொண்டு வந்தனர். மேளதாளம் முழங்க  தடபுடலான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த விழா ஏற்பாடு அந்த  கிராமத்தையே வியக்க வைக்கும் வகையில் இருந்தது.

தாய்மாமன் சீர்வரிசையுடன் தனது மருமகளை விழா நடக்கும் பந்தலை நோக்கி அழைத்து வந்தது தாய்மாமனின் கெத்தே தனிதான் என்று பேசும் அளவிற்கு இருந்தது.

இந்த நிகழ்ச்சி அந்த கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

Newsdesk

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி