ஒவ்வொரு நாளும் செம்பரம்பாக்கம் ஏரியைப் பற்றி ஒவ்வொரு தகவல்கள் ஊடகங்களில் வருவதைவிடவும் சமூக வலை தளங்களில் வந்த தகவல்கள் அதிர வைத்தன. செம்பரம்பாக்கம் ஏரி எங்கு இருக்கிறது எப்படி இருக்கிறது?
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரி சென்னையில் இருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த உபரிநீர் வெளியேறும் இடத்தில் உருவாகிறது அடையாறு ஆறு. செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் நீரானது அடையாற்றில் இணைந்து மணப்பாக்கம் தொடங்கி திருநீர்மலை, நந்தம்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, கோட்டூர் வழியாக அடையாறு முகத்துவாரத்தில் இணைந்து வங்கக் கடலில் கலக்கிறது.
சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளிலேயே மிகவும் பெரியது செம்பரம்பாக்கம் ஏரி ஆகும் . ஏரியின் கொள்ளவு 3,645 மில்லியன் கன அடி. அதாவது, தமிழ்நாட்டில் உள்ள நடுத்தர அணைகளுக்கு இணையான கொள்ளளவு கொண்டது செம்பரம்பாக்கம் ஏரி.
தற்போழுது கோடை காலம் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு பல மாதங்களுக்கு பிறகு 50சதவீதத்திற்க்கு கீழ் சரிந்ததுள்ளது.
3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு தற்போதைய நிலை 1808 மில்லியன் கனஅடியாக நீர் உள்ளது. கோடை காலம் என்பதால் நீர்வரத்து இல்லை.
சென்னை மக்கள் குடிநீருக்காக செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தினசரி 109 கனஅடி நீர் எடுக்கப்படுகிறது.