தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு சார்பாக இருக்கிறது என விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவன் அரியலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அரியலூரில் உள்ள கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரம் மக்களவை தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களை திருமாவளவன் இன்று பார்வையிட வந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திந்த அவர் கூறியவதாவது, மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றிவிடும் என்கிற அச்சத்தில் பிரேதமர் நரேந்திர மோடி பேசி வருகிறார். தொடக்கத்தில் இருந்தே இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறை ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு சார்பாக இருக்கிறது. தேர்தல் பிரசார விவகாரங்களில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் அறிக்கை அனுப்ப வேண்டும்.
தொடர்ந்து பேசிய அவர் தேர்தல் பிரசாரத்தில் மோடி பேசிய பேச்சிற்கு அவரிடம் விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டிய தேர்தல் ஆணையம், மாறாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு அனுப்பியது ஏன் என்று விளங்கவில்லை. பிரதமர் மோடியிடன் விளக்கம் கேட்பதற்கு கூட தேர்தல் ஆணையம்ம் அஞ்சுகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒரு சார்பாக, ஆளுங்கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாக தோன்றுகிறது என இவ்வாறு அவர் கூறினார்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…