குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளுக்கான 90 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1 முதல்நிலை தேர்வு ஜூலை 13ம் தேதி நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,030 பணியிடங்களுக்கான குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு வரும் செப்டம்பர் 28- ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறையில் உதவி ஆணையர், மாவட்ட கல்வி அதிகாரி பதவிகளில் 29 காலிப் பணியிடங்களுக்கான குரூப் 1B, 1C தேர்வு ஜூலை 12ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு, ஜூன் 9ம் தேதி நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி.யின் அனைத்து தேர்வுகளுக்கும் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.