அரசியல் தெளிவு பெற மாதிரி தேர்தல் நடத்தி காண்பித்த அரசுப்பள்ளி மாணவிகள். ஓட்டுப்போட தெரிந்து கொண்டது மட்டுமின்றி தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை கற்றுக்கொண்டதகவும் பெருமிதம்.
அரசியல் களம் தேர்தல் நடைபெறும் விதம் உள்ளிட்டவற்றை மாணவர்கள் சிறு வயது முதலே அறிந்து கொள்ளும் விதமாக அவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் திருப்பூர் புது ராமகிருஷ்ணபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி தேர்தல் நடத்தி ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
இந்தப் பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலும் 1127 மாணவிகள் பயின்று வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற்று இந்தப் பள்ளி சாதனை படைத்து வருகிறது. மேலும் நீட் தேர்வில் இந்தப் பள்ளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் தேர்ச்சி பெற்று மருத்துவம் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி தேர்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.
அதில் அரசியல் கட்சிகள் போலவே பள்ளி வளர்ச்சி கட்சி மற்றும் பள்ளி சாதனை கட்சி என இரண்டு விதமான கட்சிகள் உருவாக்கப்பட்டு வேட்பாளர்கள் பிரச்சாரம் என செய்து மாணவிகள் வாக்களித்து மாணவிகளே அந்த தேர்தலை நடத்தியும் தேர்தல் நடைபெறும் முறையை அறிந்து கொண்டனர்.
நேரடி செய்முறை தேர்தல் மூலம் அனைத்து மாணவிகளும் தேர்தல் நடைபெறும் விதம் குறித்து புரிந்து கொண்டதாகவும் 18 வயதிற்கு பின்னரே தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற நிலையில் தற்போது வாக்களித்தது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் வரும் காலத்தில் தேர்தல் எவ்வாறு நடக்கும் என தெரிந்து கொண்டதால் வாக்களிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக மாணவிகள் தெரிவித்தனர். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் நன்றியை தெரிவித்தனர்.
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…
மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…