சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.54,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கடந்த வியாழக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.54,680 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளிக்கிழமை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,120க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ஒரு சவரன் ரூ,55,080 விற்பனையானது. நேற்று தங்கம் விலையானது சனிக்கிழமை விலையில் தொடர்ந்து எந்த மாற்றமுமின்றி விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.54,760க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.6,845 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.