மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஐந்தருவி, பழைய குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறையையெட்டி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க வருகின்றனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மலையை ஒட்டியுள்ள நீர் பிடிப்பு பகுதிகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அதுவும் குற்றால அருவிகளான பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பழைய குற்றாலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இளைஞர் ஒருவர் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பழைய குற்றாலத்தில் குளிப்பதற்காக சென்ற நெல்லையை சேர்ந்த அஸ்வின் என்ற இளைஞர் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகின். நிலையில் அடித்து செல்ல பட்ட சிறுவன் 5 கிலோ மீட்டர் தூரத்தில் சடலமாக மீட்க பட்டுள்ளார்.
இதனால் சுற்றுலா பயணிகள் பயந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவிகளில் தற்போது போலீசார் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.