உதகையில் ஊர்வலம் சென்ற பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அக்கட்சியில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
‘பங்குனி உத்திரம் திருவிழா’- வேட்பு மனுவைத் தாக்கல் செய்த நட்சத்திர வேட்பாளர்கள்!
நீலகிரி (தனி) மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தனது வேட்பு மனுவை இன்று (மார்ச் 25) தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார். இதனிடையே, வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய வேட்பாளருடன் அனுமதிக்கப்பட்ட தொலைவைத் தாண்டி ஊர்வலம் சென்ற பா.ஜ.க.வினர் மீது காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, கோயில்களில் சிறப்பு வழிபாடு!
இதனை கண்டித்து, பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் வேட்பாளரும், மத்திய இணையமைச்சருமான எல்.முருகன் தலைமையில் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர். அப்போது பேசிய அண்ணாமலை, காவல் கண்காணிப்பாளரைப் பணியிடை நீக்கம் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளார்.
இந்த சம்பவம் காரணமாக உதகையில் பதற்றமான சூழல் நிலவுகிறது