நாடாளுமன்ற தேர்தலையொட்டி நீலகிரி மக்களவைத் தொகுதியான மேட்டுப்பாளையத்தில் திமுக வேட்பாளர் ஆ.ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கழக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எத்தனை முறை வந்தாலும், தமிழ்நாட்டிலேயே தங்கினாலும் பாசிசக் கூட்டம் விரட்டியடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், மேட்டுப்பாளையத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்களிடத்தில், நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் @dmk_raja அவர்களை ஆதரித்து இன்று வாக்கு சேகரித்தோம். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியின் குரலும் – சமூகநீதியின் குரலும் ஒருசேர நாடாளுமன்றத்தில் ஒலிக்க ”உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களிப்போம் என உரையாற்றினோம்.