நாடாளுமன்ற தேர்தலையொட்டி ஈரோடு தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கழக வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
ஈரோடு மக்களவைத் தொகுதியில் களம் காணும் அன்பு சகோதரர் – கழக இளைஞரணி மாநில துணை செயலாளர் @keprakashdmk உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்டு மொடக்குறிச்சியில் இன்று பரப்புரை செய்தார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் – புதுமைப்பெண் திட்டம் – மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் என மகளிர் போற்றும் அரசாக நம் திராவிட மாடல் அரசு திகழுகிறது. அதே நேரம், மணிப்பூர் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் மகளிர் பாதுகாப்பையும் – மாண்பையும் பாசிச கூட்டம் சிதைத்து வருகிறது. இவற்றை எடுத்துச் சொல்லி, பிரகாஷ் அவர்களுக்கு வாக்கு சேகரித்தார்.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…