நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா வரும் ஏப்ரல் 04- ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
அரவிந்த் கெஜ்ரிவாலை பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பல் மாநிலங்களில் 104 மக்களவைத் தொகுதிகளில் வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
வாக்குப்பதிவிற்கான நாட்கள் குறைவாகவே இருப்பதால் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்துத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் ஏப்ரல் 04- ஆம் தேதி தமிழகம் வருகிறார்.
ஏப்ரல் 04- ஆம் தேதி சிவகங்கை, மதுரையில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபடவுள்ளார்.
சுட்டெரிக்கும் வெயில்- தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
அதைத் தொடர்ந்து, ஏப்ரல் 05- ஆம் தேதி சென்னையில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். அமித்ஷா பங்கேற்கும் பொதுக்கூட்டங்களில் கூட்டணி கட்சித் தலைவர்களும் கலந்துக் கொள்கின்றனர்.