தமிழ்நாடு

நகர்ப்புற மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் – ராதாகிருஷ்ணன்

நகர்ப்புற மக்கள் வாக்களிப்பதில் சுணக்கம் – ராதாகிருஷ்ணன்

சென்னையில் வாக்குப்பதிவு குறைவதற்கு நகர்ப்புற சுணக்கமும் வெயிலின் தாக்கமும் காரணம் என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாநகராட்சி ஆணையருமான ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் சென்னை லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மின்னணு வாக்குபதிவு இயந்திங்கள் வைக்கப்பட்ட பின்பு பாதுகாப்பு அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆய்விற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், சென்னையில் 48.60 லட்சம் வாக்குகள் பதிவாகிவுள்ளதாகவும், மூன்று தொகுதியையும் சேர்த்து 56.01 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது என்றார். வட சென்னையில் 60.13 சதவீத வாக்குகளும், தென் சென்னையில் 54.27 சதவீதமும், மத்திய சென்னையில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளதாக கூறினார்.

சென்னையில் கட்காபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் 70 சதவீதமும், ஒட்டுமொத்தமாக கணக்கெட்டு பார்க்கையில் நகர்புறங்களில் ஏற்படும் சுணக்கம் மற்றவர்கள் வாக்களிக்கிறார்களே நாங்கள் வாக்களித்தால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது என்று காரணத்தினாலும், மதிய வேலைகளில் ஏற்பட்ட வெயிலின் தாக்கத்தினாலும் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்றார்.

47 வகையில் வாக்கு சதவீதத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம். அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த வாக்கு சதவீதம் பதிவாகி இருக்கிறது இல்லையென்றால் இது மேலும் குறைந்திருக்க கூடும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

லயோலா கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறை பகுதியில் 188 கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும், நான்கு அடுக்கு பாதுகாப்பு 24 மணி நேரமும் போடப்பட்டு இருப்பதாக கூறினார்.

முதல் அடுக்கில் மத்திய ஆயுதப்படையும், இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் துறையினரும், மூன்றாவது அடுக்கில் ஆயுதப் படையும், நான்காவது அடுக்கில் தமிழக காவல் துறையினர் இருப்பார்கள். மொத்தமாக 1095 பேர் பணியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார்.

ஒருவேளை அந்த அறையை திறக்க வேண்டும் என்றால் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன், பல அடுக்கு அனுமதி வாங்கிய பிறகுதான் உள்ளே செல்ல முடியும் என்றார். இந்தப் பகுதி ஜூன் நான்கு வரை இந்தப் பகுதி தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.

சென்னையில் 2019 தேர்தலை விட இந்த முறை நான்கு விழுக்காடு குறைந்துள்ளது என்று தெரிவித்த அவர் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் 52.4 சதவீத வாக்குகள் தான் பதிவாகியுள்ளதாகவும், பல்வேறு காரணங்களால் சிலரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும். சில நேரங்களில் தவறுதலாக சிலர் நீக்கப்படுதலும் நடந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரையில் அனைத்து வழிக்காட்டு நெறிமுறைகளையும் முடித்த பிறகுதான் சேர்த்தல் நீக்கல் நடக்கும் என்று தெரிவித்தார்.

மக்களும் வாக்காளர் அடையாள அட்டை இருந்தால் வாக்கு இருக்கும் என்று நினைக்க வேண்டாம் என்று தெரிவித்தார்.

https://www.mugavari.in/news/tamilnadu-news/today-gold-rate-7/1506

அதிகாரப்பூர்வமாக பூத் ஸ்லீப் கொடுக்கப்பட்டு இருந்தால் கண்டிப்பாக அது தவறாது. ஆனால் பழைய தகவல்களை வைத்து பூத் ஸ்லீப் கொடுக்கப்பட்டு இருக்கலாம். அதை தடுக்க கூடுதல் விழிப்புணர்வு உண்டாக்கப்படும். தமிழகத்தில் தேர்தல் கட்டுப்பாடுகள் குறித்து படிப்படியாக இந்திய தேர்தல் ஆணையத்தில் இருந்து விதிவிலக்குகள் அறிவிக்கப்படும் என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஒரே சின்னத்திற்கு வாக்கு பதிவானதாக வரும் தகவல்கள் முற்றிலும் தவறானது என்றும் வியாசர்பாடி மற்றும் மத்திய சென்னையில் உள்ள பூத்தில் டெஸ்ட் ஓட்டு போட்டு, அவர்களுக்கு சுமூகமாக விளக்கம் அளிக்கப்பட்டது என்றார். சென்னையில் பெரிய அளவில் எங்கும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பழுதாகவில்லை என்றும் தேர்தல் நடத்தும் அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Newsdesk

Recent Posts

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி

அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…

நவம்பர் 21, 2024 2:53 மணி

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…

நவம்பர் 20, 2024 2:28 மணி

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…

நவம்பர் 20, 2024 2:02 மணி

ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…

நவம்பர் 20, 2024 10:17 காலை