விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு ரயிலில் இருந்து தவறி விழுந்த 7 மாத கர்ப்பிணி (கஸ்தூரி) பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே கொல்லம் விரைவு இரயில் சென்று கொண்டிருந்த 7 மாத கர்ப்பிணியான கஸ்தூரிக்கு திடீரென வாந்தி வந்ததால், காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.உடனடியாக கஸ்தூரியின் உறவினர்கள் s-9 பெட்டியில் அபாய சங்கிலி செயல்படாததால் s-8 அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முற்பட்டுள்ளனர். s-8 பெட்டியிலும் அபாய சங்கிலி செயல்படாததால் 5 கிலோ மீட்டர் தள்ளி பூவனூர் கிராமத்தில் இரயில் நின்றுள்ளது. பின்னர் அவரை தேடுவதில் 2 மணி நேரம் தாமதம் என உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 3 மணி நேரம் கழித்து கஸ்தூரியின் உடலை அவரது உறவினர்கள் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் அபாய சங்கிலி செயல்பட்டிருந்தால் உடனடியாக இரயிலை நிறுத்தி அவரை காப்பாற்றிருக்கலாம் என உறவினர் தரப்பில் தெரிவித்துள்ளனர்.நாளை மறுநாள் கஸ்தூரிக்கு சங்கரன்கோவிலில் வளைகாப்பு நடைபெற இருந்த நிலையில் இன்று கர்ப்பிணி பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…