அதேசமயம் இவர் மஞ்சள் வீரன் எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியானது. அதன்படி இந்த படத்தை செல்லம் என்பவர் இயக்கப் போவதாகவும் இந்த படத்தினை தி பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது.
அதைத்தொடர்ந்து படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் டிடிஎஃப் வாசன் படப்பிடிப்பில் சரியாக ஒத்துழைப்பு தராத காரணத்தால் அதிரடியாக படத்தில் இருந்து நீக்கப்பட்டார். இதனை இயக்குனர் செல்லம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
அதேசமயம் டிடிஎஃப் வாசன் படம் தொடர்பாக அனைத்து செலவுகளையும் தான் செய்ததாகவும் படத்திலிருந்து நீக்கியதற்கான காரணம் மட்டும் தனக்கு தெரிய வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தில் நடிக்கும் புதிய ஹீரோ தொடர்பான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மஞ்சள் வீரன் படத்தில் நடிகர் கூல் சுரேஷ் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நடிகர் கூல் சுரேஷ் ஏற்கனவே காதல் அழிவதில்லை, திருடா திருடி, பம்பரக் கண்ணாலே, நண்பேண்டா என பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…