செய்திகள்

லஞ்சம் வாங்கிய மனைவியை வட்டமிட்டு சிக்க வைத்த கணவர்.

கரை படிந்த கை என மனைவியை வட்டமிட்டு வீடியோ எடுத்த கணவர்
தெலங்கானாவில் மனைவி தொடர்ந்து லஞ்சம் வாங்கி கொண்டு வீட்டிற்கு வருவதாக கூறி கணவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தின் மணிகொண்டா நகராட்சி டி.இ.இ திவ்யா ஜோதி தினந்தோறும் லஞ்ச பணத்துடன் வீட்டிற்கு வருவதாக அவரது கணவர் ஸ்ரீபத் வீட்டில் உள்ள பணத்துடன் வீடியோ எடுத்து ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளார்.

மணிகொண்டா நகராட்சியில் டி.இ.இ. யாக பணி புரியும் ஜோதி – ஸ்ரீபத் தம்பதிக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் மனைவி ஜோதி ரூ. 20 முதல் 30 லட்சம் வரை ஒப்பந்ததாரர்களிடம் பணம் லஞ்சமாக பெற்று தினந்தோறும் வருகிறார் எனவும் எத்தனை முறை சொல்லியும் மனைவி ஜோதி லஞ்சம் வாங்குவதை கைவிடவில்லை எனவும் இதனால் லஞ்சம் வாங்குவது தொடர்பாக கணவன், மனைவி இடையே நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

லஞ்சம் வாங்குவது குற்றம், பாவம் என்று கணவன் சொல்லிக்கொண்டே இருந்தாலும் மனைவி ஜோதி அதைப் பொருட்படுத்துவதில்லை. லஞ்சம் வாங்கக் கூடாது என்று கணவன் சொல்லும் போதெல்லாம் சண்டையிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீபத் லஞ்சப் பணத்தை மனைவி வீட்டில் பல இடங்களில் மறைத்து வைத்திருந்ததை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேறிய விவகாரம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏழு ஆண்டுகளாக லஞ்சம் வாங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார். தனது மனைவி ஒரு நாள் கூட லஞ்சம் வாங்காமல் வீட்டுக்கு வந்ததில்லை எனவும் கமிஷன் வடிவில் லஞ்சம் வாங்கி, பணத்தை வீட்டுக்கு கொண்டு வந்து, தனக்கு தெரியாமல் ரகசியமாக மறைத்து வைக்கின்றார். இருப்பினும் வீட்டில் உள்ள பீரோ , வார்ட்ரோப்களில் புடவைகளுக்கு இடையே, பேப்பர்களுக்கு இடையே, சாமி அறைக்குள், சாமி படங்களுக்குப் பின்னால், ஷூ ஸ்டாண்டில் கூட மனைவி பணத்தை மறைத்து வைத்திருப்பதை வீடியோ எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார். மொத்தம் 80 லட்சம் ரூபாய் மறைத்து வைத்திருப்பதாக கணவர் கூறியுள்ளார்.

மேலும் லஞ்சம் வாங்க வேண்டாம் என மனைவியிடம் கூறிய சமயத்தில் எல்லாம் இருவருக்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது. சண்டையிடும் போதெல்லாம் அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் வாங்க ஊக்குவிப்பதாகவும், அவர்களின் அழுத்தத்தை தாங்க முடியாமல் லஞ்சம் வாங்குவதாகவும் கணவரிடம் கூறி உள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிய வந்ததால் இரண்டு நாட்களுக்கு முன்பு ஜோதி ஐதாராபாத் மாநகராட்சிக்கு பணியிடம் மாற்றப்பட்டதாகவும் கணவர் ஸ்ரீபத் தெரிவித்துள்ளார்.

 

Newsdesk

Recent Posts

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி

அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…

நவம்பர் 21, 2024 2:53 மணி

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…

நவம்பர் 20, 2024 2:28 மணி

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…

நவம்பர் 20, 2024 2:02 மணி

ஒரே நாளில் 12 விமானங்கள் திடீரென ரத்து – பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…

நவம்பர் 20, 2024 10:17 காலை

ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்

மராட்டியம் மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வேண்டும் என பிரதமர்…

நவம்பர் 20, 2024 9:59 காலை