செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது.நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதம் வரை சீசன் களை கட்டி இருக்கும். கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரியில் தண்ணீர் உள்ளதால் பறவைகள் வர தொடங்கியுள்ளது.
இந்த பறவைகள் சரணாலயத்திற்கு இலங்கை, பாகிஸ்தான் ,பர்மா , இந்தோனேஷியா, சைபீரியா ,கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து இறைக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தரும் .இந்த சரணாலயம் நவம்பர் மாதம் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மே மாதம் வரை சீசன் களை கட்டி இருக்கும் ஆண்டுக்கு இனப்பெருக்கத்திற்கு பிறகு ஒரு லட்சம் பிறவைகளாக வெளியேறும் நத்தைகுத்தி நாரை,பாம்பு தாரா, கூழை கடா அரிவாள் மூக்கன், மிளிர்உடல் அரிவாள் மூக்கன், நாரை உள்ளிட்ட 23 வகையான பறவைகள் வருகை தந்து இனப்பெருக்கம் செய்வது வழக்கம் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக செங்கல்பட்டு மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக இந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஏரியில் தண்ணீர் உள்ளதால் தற்போது 2000 க்கு மேற்பட்ட பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்துள்ளது. இன்னும் இந்த மாதத்திற்குள் சுமார் 5000 க்கு மேற்பட்ட பறவைகள் வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.