சென்னை மதுரவாயலில் உள்ள லலித்தாம்பிகை மருத்துவமனையில் புதிதாக நவீன செயற்கை கருத்தரிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.தவெக கட்சி தலைவர் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு அரசியல் குறித்து பேச விரும்பவில்லை என நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு மழுப்பலான பதில் . குழந்தை பிறப்பது இயற்கையானது திருமணமான தம்பதிகள் குழந்தை வேண்டாம் என 5 ,6 ஆண்டுகள் தள்ளிப் போடுவதால் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுவதாக நடிகையும் பாஜக பிரமுகமான குஷ்பூ தெரிவித்துள்ளார்.
சென்னை மதுரவாயலில் உள்ள லலித்தாம்பிகை மருத்துவமனையில் புதிதாக நவீன செயற்கை கருத்தரிப்பு மையம் துவக்கப்பட்டுள்ளது.இதனை நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.பின்னர் மருத்துவமனையை பார்வையிட்ட அவர் அங்கிருந்த மேடையில் பேசினார்.அப்போது குழந்தை என்பது உறவுகளை ஒன்றினைக் கூடியது என்றும் அப்போது தான் உறவுகளுக்குள் ஒரு பாண்டிங் ஏற்படும் என்றார். பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த குஷ்பூ நடிகர் விஜய் மாநாடு குறித்து கேட்டபோது தற்போது அரசியல் பேச விரும்பவில்லை என்று மழுப்பலான பதில் அளித்தார். மேலும் குழந்தை பிறப்பது இயற்கையான ஒன்று அதனை தள்ளிப் போடுவதாலும் குழந்தை பிறப்பதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவித்தார் நல்ல உணவு முறை,வாழ்க்கை முறைகளை பின்பற்றாததால் இது போன்ற பிரச்சினை வருவதாக தெரிவித்தார்.மேலும் அரண்மனை 5 குறித்த கேள்விக்கு அரண்மனை 5 படம் துவக்க இன்னும் டைம் ஆகும்.படத்தின் பட்ஜெட் குறித்து சுந்தர் சி.அறிவிப்பார் என்று கூறினாா்.
ஆவேஷம் பட இசையமைப்பாளர் திருமணத்தில் நேரில் சென்று வாழ்த்திய பகத் – நஸ்ரியா!