செய்திகள்

தவெக – மாநாடு : ரகசியத்தை கடைபிடிக்கும் விஜய் – ஆவலோடு காத்திருக்கும் தமிழக மக்கள் !

என்.கே. மூர்த்தி

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடத்தவுள்ள முதல் அரசியல் மாநாட்டை பாா்க்க தமிழ்நாடே ஆவலுடன் காத்திருக்கிறது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகன் நடிகர் விஜய். தற்போது அவர் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார். இப்படி புகழின் உச்சியில் இருக்கும் ஒரு நடிகர் அரசியல் கட்சியை தொடங்கி முதல் மாநில மாநாடு நடத்துகிறார் என்றால் எல்லோருடைய கவனமும் அவர் பக்கம் திரும்பி இருப்பது இயல்புதான்.

அவர் நடிகராக அறிமுகமான காலம் முதல் தற்போது ஒரு அரசியல் கட்சியை தொடங்கி, அதற்கான கொடியை அறிமுகம் செய்து, மாநாடு தேதி அறிவிப்பு வரை மிகவும் நிதானமாக அடியெடுத்து வைத்து வருவதை அரசியல் ஆய்வாளர்கள் கூர்மையாக கவனித்து வருகின்றனர். அதுவும் எந்த அரசியல் கட்சியும் சாராத அரசியல் விமர்சகர்கள், ஊடகவியலாளர்கள் அவரை மனதுக்குள் பாராட்டவே செய்கிறார்கள்.

மக்களுக்காக அப்படி என்ன நடிகர் விஜய் செய்துவிட்டார்? மக்கள் பிரச்சனையில் இதுவரை எதிலாவது பங்கேற்று இருக்கிறாரா? திடீரென்று அரசியலில் குதித்து முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படலாமா?என்று நிறைய விவாதங்கள் விஜய்க்கு சாதகமாகவும், எதிராகவும் நடைபெற்று வருகிறது. அதுபோன்ற விவாதத்தை உருவாக்கி விட்டுட்டு அவர் அமைதியாக மக்களின் மனநிலையை கவனித்து கொண்டிருக்கிறார்.

நடிகர் விஜய்யின் திட்டம் தமிழ்நாட்டில் அரசியல் கட்சியை தொடங்கி, அதை வைத்து ஆட்சியை பிடிப்பது என்பது அவருடைய இறுதி இலக்கு.

அதற்காக அவர் நீண்ட காலமாக தன்னை தயார் படுத்திக் கொண்டு வருகிறார். வெற்றி என்ற ஒற்றை இலக்கை நோக்கி ஒவ்வொரு நாளும் அதற்கான செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்.

வீண் பேச்சு இல்லை, வெட்டி உதார் இல்லை, தேவையே இல்லாமல் யார் மீதும் விமர்சனம் வைப்பதில்லை. அமைதி… அமைதி.. இதுதான் இன்று சீமானை போன்ற தலைவர்களுக்கு தூக்கத்தை கெடுத்துள்ளது.

முதலில் ஒரு நடிகராக சினிமாவில் ஆழமாக கால் பதிக்க திட்டமிட்டார். அதை படிப்படியாக முன்னேறி தமிழ்த்திரை துறையில் முதலிடத்தை பிடித்தார். கூடவே, அவருக்கான ரசிகர் மன்றத்தை மாநிலம் முழுவதும் கட்டி எழுப்பினார். அதை 2013ல் “தலைவா” படத்திற்கு பின்னர் விஜய் மக்கள் இயக்கமாக மாற்றி, ரத்த தானம் வழங்குதல், நலிந்த வர்களுக்கு சிறிய சிறிய நலத்திட்ட உதவிகள் வழங்கி
பொது மக்களிடம் நெருங்க ஆரம்பித்து தற்போது வரை செயல்பட்டு வருகிறார்.

நாட்டின் நெம்பர் 1 நடிகராக, சினிமாவில் நெம்பர் 1 சம்பளம் வாங்குபவராக, அதிக ரசிகர் மன்றம் உருவாக்கி வைத்திருப்பவராக என்று நடிகர் விஜய் தன்னுடைய முதல் இலக்கை படிப்படியாக அடைந்து விட்டார்.

அதற்கு அடுத்து அவருடைய இலக்கை அடைவதற்கு இரண்டாவது திட்டம் அரசியல் கட்சியை தொடங்குவது. அதை கடந்த பிப்ரவரி -2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை மக்களிடம் அறிமுகம் செய்தார். ஆனால் அப்போது அதனுடைய கொடி, கொள்கை, திட்டம் எதையும் அறிவிக்கவில்லை. அது பெரும் விவாதமாக விவாதிக்கப்பட்டது. அந்த விவாதம் தான் அவருடைய வெற்றிக்கான வழிமுறை என்று கருதுகிறார்.

அதனை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் தனி கொடியை ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி அறிமுகம் செய்தார். அதாவது ஆறு மாதங்கள் கழித்து கட்சியின் கொடியை அறிமுகப் படுத்தினார். அப்போதும் அவர் கட்சியின் கொள்கை, அவருடைய அடுத்த திட்டம் என்ன என்பதை அறிவிக்கவில்லை. அனைத்தும் ரகசியம்

நடிகர் விஜய், தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவிப்பதற்கு முன்பு, எந்த தகவலும் இல்லை. ரகசியமாகவே வைத்திருந்து கட்சியின் பெயரை அறிவித்தார். அதன் பின்னர் ஆறு மாதங்கள் கழித்து “கொடி” யை அறிவித்தார். அதற்கு முன்பும் கட்சி, கொடி குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இப்படி ஒவ்வொன்றையும் ரகசியமாகவே வைத்து இலக்கை நோக்கி பயணம் செய்து வருகிறார்.

மாநாட்டு பந்தல் அமைக்க, பாதுகாக்க அனுபவம் இல்லாத தனது கட்சியினரிடம் கொடுத்து சொதப்புவதை தவிர்த்து விட்டார். நிதானமாக யோசித்து அனுபவம் வாய்ந்த சினிமா ஷெட் தொழில்நுட்ப நபர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். மாநாட்டு பந்தலை சுற்றிலும் பவுன்சர் களை இறக்கி பாதுகாப்பு பணிகளை கவனித்து வருகின்றார். மாநாட்டு பந்தல் அமைக்கும் பணிகள் ஏறத்தாழ முடிந்துவிட்டது.

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சியில் நிறைய அரசியல் வாதிகள் இணைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேடையேறப்போகும் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் யார் என்பதை இதுவரை ரகசியமாகவே வைத்திருக்கிறார்.

அரசியல் களத்தில் வெற்றி பெறுவதற்கு ரகசியங்கள், தந்திரங்கள்,சில நுட்பங்கள் தேவைப்படுகின்றன. புதிய அரசியல் கட்சியை மக்களிடம் கொண்டு செல்லும்போது, ஏற்கனவே களத்தில் இருக்கும் கட்சிகள் எந்தெந்த வகையில் பலவீனமாக இருக்கிறது என்பதை நுட்பமாக கவனிக்க வேண்டும். அவர்கள் பலவீனமாக இருக்கும் இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை கொண்டு நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

புத்திசாலிகள் ஒருபோதும் தங்களை அறிவாளிகளாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். நாம் அறிவாளிகளாக காட்டிக் கொண்டால் நம்முடன் போட்டிக்கு நிற்பவர்கள் உஷாராகி நிறைய முன்னெச்சரிக்கை தயாரிப்பில் இறங்கி விடுவார்கள் என்பதை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்.

விஜய் சினிமா துறையில் அனுபவம் வாய்ந்தவர். சில திரைப்பட இயக்குர்கள் என்ன கதை எடுக்கிறோம் என்பதை யாருக்கும் தெரியாமல் ரகசியமாகவே வைத்திருப்பார்கள். அது மட்டுமல்ல, அந்த யூனிட்டில் உள்ள யாருக்குமே கதை தெரியாது. காட்சிகளை முன்னும் பின்னும் எடுத்து திரைப்பட கேமரா மேன் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு படத்தின் மைய கதை தெரியாமல் பார்த்துக் கொள்வார்கள். முதல் நாள் படம் வெளியானதும், அதன் பிரமாண்ட மும், திரைக்கதையும் அத்தனை பேரையும் ஆச்சிரியாத்தில் ஆழ்த்தும். அதை தான் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செய்கிறார்.

Newsdesk

Recent Posts

இயக்குநர் பாராதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்..!

பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…

மார்ச் 25, 2025 9:46 மணி

மார்பகத்தை பிடிப்பது பாலியல் குற்றமில்லையா?? வெட்கக்கேடான தீர்ப்பு – ஸ்வாதி மாலிவால்

பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…

மார்ச் 21, 2025 2:10 மணி

தொகுதி மறுசீரமைப்பு எம்.பி சீட்டுக்கான பிரச்சனை மட்டுமல்ல – வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்..!!

தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…

மார்ச் 21, 2025 11:33 காலை

சற்று குறைந்த தங்கம் விலை.. நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி.

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…

மார்ச் 21, 2025 10:30 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி