மாவட்டம் முழுவதும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 3 டிஐஜி, 10 எஸ்.பி க்கள், 50 டி.எஸ்.பி க்கள் என மொத்தம் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் இன்று மாலை 4 மணிக்கு தொடங்க உள்ளது. மாநாட்டு திடலில் அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அமர்வதற்கு 160 அடி அகலம், 58 அடி நீளத்தில் மேடை அமைக்கப்பட்டுள்ளது. கட்சியினுடைய தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு 66 கேலரி அமைக்கப்பட்டு அதில் 55,000 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டு திடலில் 25 எல்இடி மற்றும் மாநாட்டு வெளி பகுதி மற்றும் ஐந்து பார்க்கிங் வசதி ஆகிய இடங்களில் 40 எல்.இ.டி திரை வைக்கப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் : சிறைக்கைதி தப்பி ஓட்டம் – பேலீசாா் தேடி வருகின்றனா்.
வாகனங்கள் நிறுத்துவதற்கு மாநாட்டு திடல் அருகே மற்றும் கீழக்கொந்தை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200 ஏக்கரில் ஐந்து பார்க்கிங் வசதிகள் போடப்பட்டுள்ளன. மாநாட்டு திடலில் ஆம்புலன்ஸ் வசதிகளுடன் 10 மருத்துவர் குழு மற்றும் பார்க்கிங் வசதி வெளிப்பகுதியில் 8 என மொத்தம் 18 மருத்துவ குழுக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். மாநாட்டு முகப்பில் நிறுவப்பட்டுள்ள 101 அடி கொடி கம்பத்தில் த.வெ.க தலைவர் நடிகர் விஜய் கொடி ஏற்ற உள்ளார். மாநாட்டிற்கு வரும் தொண்டர்களுக்கு ஒரு கைப்பையில் ஒரு 300 ml வாட்டர் பாட்டில், மிக்சர், ஒரு பிஸ்கட் பாக்கெட் அடங்கிய தொகுப்பு பையும் கொடுப்பதற்கு தயார் செய்து வைத்துள்ளனர்.
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் 300 மீட்டர் தொலைவில் இந்த மாநாடு நடைபெறுவதனால் மாநாட்டிற்காக மாநாட்டு திடல், தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாவட்டம் முழுவதும் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 3 டி ஐ ஜி, 10 எஸ்பி க்கள், 50 டிஎஸ்பி க்கள் என மொத்தம் சுமார் 4000 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநாட்டின் பாதுகாப்பை கருதி யாரும் இரண்டு சக்கர வாகனங்களில் வரக்கூடாது என்று தன்னுடைய தொண்டர்களுக்கு தவெக தலைவர் விஜய் கடிதம் எழுதியிருந்தார். அதையும் பொருட்படுத்தாமல் செல்வதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.