வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே அரசு பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அடுத்த பாஸ்மர்பெண்டா கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பெரும்பாடி அடுத்த அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்த உதயகுமார் (53) தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் மாணவிகள் சிலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் வந்தது. இதனை எடுத்து மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவின் பேரில் குடியாத்தம் ஆர்டிஓ சுபலட்சுமி, தாசில்தார் வடிவேல் ஆகியோர் நேற்று (25-10-2024) இரவு அப்பள்ளியில் படிக்கும் பாஸ்மர் பெண்டா கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். அதில், தலைமை ஆசிரியர் உதயகுமார் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதியானது.இதுகுறித்த அறிக்கை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராணி தலைமையிலான போலீசார் தலைமையாசிரியர் உதயகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கிணற்றில் வீசி கொலை – குற்றவாளி கைது