வருடா வருடம் திருப்பதி குடை கேசவபெருமாள் கோயிலிலிருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு திருமலையில் நடைபெறும் கருட சேவையின் போது இந்த திருகுடைகள் சாமிக்கு அர்ப்பணிப்பது வழக்கம் .அந்த வகையில் இந்த ஆண்டு திருப்பதியில் நடைபெறும் பிரம்மோர்ச்சவ திருவிழா துவங்கி வரும் 12ம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், 5 வது நாள் நடைபெறும் கருட உச்சவத்தின்போது உற்சவருக்கு முன்னும், பின்னும் இந்த குடைக்குள் எடுத்துச் செல்லப்பட்டு அலங்கரிக்கப்படும், குடைகள் பலநூறு ஆண்டுகளாக சென்னை சௌகார் பேட்டையை ஒட்டியுள்ள,சென்ன கேசவப் பெருமாள் கோயிலில் தயாரிக்கப்பட்டு இந்த திருகுடைகள் வழிவழியாக கொண்டு செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு சென்னை மாநகரில் வளம்வந்து, குடைகள் இன்று அம்பத்தூர் வழியாக ஆவடி அருகே கவரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் திருக்கோவிலுக்கு வருகை தந்தது.
இதனை ஒட்டி ஆவடி கவரப்பாளையம் பகுதி திருமலை திருப்பதி திருக்குடை பொறுப்பாளர் ஆர் கோதண்டன் சிறப்பான வரவேற்பு அளித்தார் பின்பு கவரப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் பெருமாள் ஆண்டாள் சுவாமிகளுக்கு பல்வேறு மூலிகை திரவியங்கள் கொண்டு பல்வேறு அபிஷேகங்கள் துளசி மற்றும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வங்களுக்கு நெய்வேத்தியத்துடன் தீபாரதனை காட்டப்பட்டன .
பின்பு திருப்பதி கொடை தலைமை ஏற்று நடத்தும் ஆர்.ஆர்.கோபால்ஜி அவர்களுக்கு ஆலய நிர்வாகிகள் சார்பாக மரியாதை செலுத்தப்பட்டன.ஆலயத்திற்கு வந்த திருப்பதி குடையை பக்தர்கள் கோவிந்த கோவிந்தா என்று முழக்கமிட்டு திரு குடைகளுக்கும் பெருமாள் சாமிக்கு சமர்ப்பிக்கும் பாதாணிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழி அனுப்பினர்.
இந்த திருக்குடை ஊர்வலம் பட்டாபிராம் திருநின்றவூர் திருவள்ளூர் வழியாக அக்டோபர் 7ம் தேதி திருமலையை சென்றடையும் திருப்பதி குடை ஊர்வலத்தின்போது அனைத்து பக்தர்களுக்கும் அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…