லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அடுத்தது இவர் ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அதன்படி ஏற்கனவே பைட் கிளப் எனும் திரைப்படத்தை தயாரித்திருந்தார். அதை கடந்து ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ள பென்ஸ் எனும் திரைப்படத்தை தயாரிக்கிறார். மேலும் இவருடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தி ரூட் நிறுவனமும் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தினை பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், எஸ் ஜே சூர்யா, பகத், பாசில் ஆகியோர் நடிக்கப் போகிறார்கள் என்று தகவல்கள் கசிந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 29) நடிகர் ராகவா லாரன்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ், பென்ஸ் படம் தொடர்பாக புதிய வீடியோ ஒன்றை வெளியிட்திருந்தார். அந்த வீடியோவில், வெல்கம் டு மை யுனிவர்ஸ் மாஸ்டர் என்று லோகேஷ் கனகராஜ் சொல்வது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது. ஏற்கனவே ராகவா லாரன்ஸ் -இன் பென்ஸ் திரைப்படம் லோகேஷ் கனகராஜின் எல்சியு – வில் இணையப் போவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இதனை லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…