உலகம்

டிஜிட்டல் தொழில்நுட்பம்- பிரதமருடன் உரையாடிய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ்!

 

இந்தியர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மிக வேகமாகக் கற்றுக் கொண்டு வருவதுடன், மற்ற நாடுகளையும் வழிநடத்தி வருவதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் புகழ்ந்து பேசியிருக்கிறார்.

திருத்தணி கோயிலின் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவுத் தொடங்கி, யூபிஐ பரிவர்த்தனை என இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து விரிவாக விவாதித்தனர்.

இந்தியாவின் தலைமையில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜி20 உச்சி மாநாடு குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த உச்சி மாநாடு பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் சர்வதேச நாடுகளில் இருந்து கலந்து கொண்ட பிரதிநிதிகள், டிஜிட்டல் புரட்சிக் குறித்து தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தினர்.

ஆனால் தொழில்நுட்பத்தில் உள்ள ஏக போகத்தைத் தடுக்கும் விதமாக, இந்திய மக்களுக்காக அதனை ஜனநாயகப்படுத்தி உள்ளோம் என்று பிரதமர் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக் கொண்ட பில்கேட்ஸ், இந்தியர்கள் தொழில்நுட்பத்தை அதிவேகமாகக் கற்றுக் கொண்டு பயன்படுத்தி வருவதுடன், மற்ற நாடுகளுக்கும் வழிகாட்டி வருவதாக புகழ்ந்து பேசினார்.

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளருக்கு அடி உதை

மேலும், காலநிலை மாற்றத்திற்கு எதிராக இந்திய எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பில்கேட்ஸ் பாராட்டினார். இந்தியாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பெண்கள் அதிகளவில் விரும்பித் தேர்ந்தெடுத்துள்ளனர் என்றார் பிரதமர்.

santhosh

Share
Published by
santhosh

Recent Posts

த.வெ.க கட்சி கொடி தொடர்பாக புதிய சர்ச்சை

தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் யானை படம் இடம் பெற்றுள்ளது. சட்டப்படி அதை பயன்படுத்த கூடாது என்று பிஎஸ்பி…

ஆகஸ்ட் 22, 2024 5:04 மணி

கர்நாடக முதல்வர் மீது விசாரணை – ஆளுநரின் சட்டவிரோத செயல்

கர்நாடக ஆளுநர் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறார். என் மீது விசாரணைக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது அதை…

ஆகஸ்ட் 17, 2024 4:52 மணி

ராஜீவ்காந்தி மருத்துவமனை- மருத்துவ மாணவர்கள் ,கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரியில் முதல்நிலை மருத்துவ மாணவி ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , குற்றவாளிக்கு உரிய…

ஆகஸ்ட் 16, 2024 5:24 மணி

நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.…

ஆகஸ்ட் 9, 2024 4:02 மணி

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிட பிரான்ஸ் சென்றார் – உதயநிதி ஸ்டாலின்

ஒலிம்பிக் போட்டியை நேரில் பார்வையிடுவதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றுள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை…

ஆகஸ்ட் 8, 2024 5:39 மணி

நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆவடி நாசர் ; அமைச்சரவை மாற்றம் இருக்கிறதா இல்லையா?

தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் நடைபெறும் என்றும் அப்பொழுது ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால்…

ஆகஸ்ட் 7, 2024 5:47 மணி