உலகம்

கென்யாவில் தொடரும் கனமழையால் ஒரு லட்சம் பேர் பாதிப்பு

கென்யாவில் தொடரும் கனமழையால் ஒரு லட்சம் பேர் பாதிப்பு

கென்யா தலைநகர் நைரோபியை புரட்டி போட்டுள்ள வெள்ளத்திற்கு நேற்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் சிக்கி இதுவரை 38 பேர் பலியாகி உள்ளனர்.

எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக கனமழை கொட்டி வருகிறது. இதன் எதிரொளியாக கென்யாவிலும் கடந்த மார்ச் மாத பிற்பகுதியிலிருந்து கனமழை பெய்து வருகின்றது. கடந்த வாரத்தில் கனமழை அதிதீவிரமாகி நைரோபி உள்ளிட்ட ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தலைநகர் நைரோபியில் பாயும் நைரோபி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு கரையோரங்களில் இருந்து குடியிருப்புகளை மூழ்கடித்தன. இதில் சிக்கி நேற்று ஒரே நாளில் 10 பேர் இறந்துவிட்டனர்.


சாலைகள் தெரியாத அளவுக்கு காணும் இடங்களில் எல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  மக்கள் கூட்டம் கூட்டமாக குடியிருப்புகளை விட்டு வெளியேறி வருகின்றனர்.
11,000 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் .

ஒரு மாதமாக தொடரும் கனமழை இயற்கை பேரிடர் ஆக மாறி உள்ளது. மச்சகோஸ் கவுண்டியில் உள்ள அத்தி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் கரையோரங்களில் இருந்து குடியிருப்புகளை மூழ்கடித்தது. அங்கு சிக்கிக் கொண்டு தவித்த 300 பேரை செஞ்சிலுவைச் சங்கத்தினர் மீட்டு உள்ளனர்.

https://www.mugavari.in/news/india-news/teslas-plan-to-set-up-plant-in-india-stalled/1905

ஒரு மாதமாக தொடரும் கனமழையில் சிக்கி இதுவரை 38 பேர் உயிரிழந்து விட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. சுமார் ஒரு லட்சம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsdesk

Recent Posts

test breaking news 2

test breaking news

ஜனவரி 10, 2025 1:31 காலை

test breaking news

test breaking news

ஜனவரி 9, 2025 1:18 காலை

24 மணிநேரமும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம்

இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…

நவம்பர் 22, 2024 11:59 காலை

HMMA வின் சிறந்த பின்னணி இசைக்கான விருது – ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ வைரல்

ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…

நவம்பர் 21, 2024 3:54 மணி

அமரன் படத்தில் இடம் பெற்ற மொபைல் எண்னிற்கு 1 கோடி இழப்பீடு கோரி நோட்டீஸ்

அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…

நவம்பர் 21, 2024 2:53 மணி

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது – தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை

இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…

நவம்பர் 20, 2024 2:28 மணி