சீனாவில் வசந்தகால காற்றாடிகள் திருவிழா
சீனாவில் நடைபெற்ற காற்றாடிகள் திருவிழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வானத்தையே வண்ண மையமாக மாற்றினர்.
கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள வைஃபாங் நகரத்தில் ஆண்டுதோறும் வசந்தகால காற்றாடிகள் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தொடங்கியுள்ள காற்றாடிகள் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு பல்வேறு வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் காற்றாடிகளை பரக்க விட்டனர்.
ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாடிகள் வானம் முழுவதையும் வியாபித்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
https://www.mugavari.in/news/tamilnadu-news/two-injured-in-car-crash/1722
இந்நிகழ்வில் காற்றாடி ஆர்வலர்கள் 1 அடி நீளம் உள்ள சிறிய காற்றாடி முதல் 230 அடி நீளம் கொண்ட ராட்சத பட்டம் வரை வடிவமைத்து அவற்றை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். விழாவில் சிறந்து முறையில் வடிவமைக்கப்பட்டிருந்த காற்றாடிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு சீனா தவிர 50 நாடுகளை சேர்ந்த காற்றாடி ஆர்வலர்கள் திருவிழாவில் பங்கேற்றனர் .