நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர். அதை தொடர்ந்து இவர் தமிழில் மாரி 2, என் ஜி கே போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அடுத்தது இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் அமரன் திரைப்படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படம் வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை சாய் பல்லவி பேட்டி ஒன்றில், உடம்பைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை என்று கூறியுள்ளார். “பிரேமம் படத்தில் நடிப்பதற்கு முன்பாக வெளிநாட்டில் நடன நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டேன். அப்போது கொஞ்சம் கவர்ச்சியாக உடை அணிந்து நடனமாடினேன். ஆனால் பிரேமம் திரைப்படம் வெளிவந்த பிறகு நெட்டிசன்கள் பலரும் அந்த வீடியோவை வெளியிட்டு மோசமான விமர்சனங்களை பதிவிட்டு வந்தனர். அப்போதுதான் முடிவு செய்தேன் இனிமேல் கவர்ச்சியாக நடிக்க கூடாது என்று.
நான் ஒன்றும் சதை பிண்டம் இல்லை. உடம்பைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. என்னுடைய இந்த லுக்கையை ரசிகர்கள் ரசித்து என் மீது அன்பைப் பொழிகின்றனர். அதனால் அதையே பின்பற்ற வேண்டும் என கருதி அதே ரூட்டில் செல்கிறேன். இதனால் எனக்கு பட வாய்ப்புகள் குறைகிறது என்றால் எனக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. என்னுடைய நடிப்பு திறமையை நம்பி யார் நடிக்க வாய்ப்பு தருகிறார்களோ அவர்கள் படத்தில் நடித்துவிட்டு போகிறேன்” என்று உணர்வுப்பூர்வமாகவும் காட்டமாகவும் பதிலளித்துள்ளார் சாய்பல்லவி..
பிரபல இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் காலமானார். தாஜ்மஹால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் மனோஜ்…
பெண்ணின் மார்பகத்தை பிடிப்பது பாலியல் துன்புறுத்தலின் கீழ் வராது என நீதிபதி தீர்ப்பு வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த…
தொகுதி மறுசீரமைப்பு என்பது எம்.பிக்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல, மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை என தமிழக முதலமைச்சர்…
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை மாற்றியமைக்கப்படும். அதிலும்…
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…