பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, இன்று (மார்ச் 25) தமிழகம் முழுவதும் வேட்பு மனுத்தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நட்சத்திர வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.
வளர்ப்பு மகளை பாலியல் தொல்லை செய்து கொலை – 2 பேர் கைது
அந்த வகையில், பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர், தனது வேட்பு மனுவைத் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்துள்ளார். அதேபோல், நீலகிரி (தனி) மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமார், தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜய பிரபாகரன் ஆகியோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். அப்போது, விஜய பிரபாகரனை, சரத்குமாரும், ராதிகா சரத்குமாரும் தட்டிக் கொடுத்தனர்.
சத்யம் திரையரங்கில் ‘யோதா’ திரைப்படத்தை பார்த்த தோனி!
அதேபோல், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் , மதுரையில் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.