முருகனின் ஐந்தாம் படை வீடாகப் போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நள்ளிரவு 01.00 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
பிரசித்திப் பெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் உற்சவர் முருகப்பெருமானுக்கு நாட்டு சர்க்கரை, பஞ்சாமிர்தம், தயிர், தேன் மற்றும் பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பால் காவடி, பன்னீர் காவடி, தேர் காவடி, ரத காவடி உள்ளிட்ட காவடிகளை ஊர்வலமாக சுமந்து வந்து, பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கோயிலில் கூட்டம் அலைமோதிய நிலையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
விடுமுறையில் வந்த ராணுவ வீரர் அரங்கேற்றிய கொடூர செயல்!
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தது. பாதுகாப்புப் பணியில் 100- க்கும் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர்.