வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கதிர் ஆனந்த் வேட்பு மனுத்தாக்கலின் போது, தவறாக பதிலளித்த காவல்துறை அதிகாரியை அமைச்சர் துரைமுருகன் கடிந்துக் கொண்டார்.
10- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது!
வேலூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலெட்சுமியிடம் மனுத்தாக்கல் செய்தார். வேட்பு மனுத்தாக்கலின் போது, 5 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பதால் காவல்துறையினர் பிறரை உள்ளே விட மறுத்தனர்.
அப்போது பரிந்துரை செய்ய வேண்டியவர்களில் ஒருவர் வராததால் அவருக்காக காத்திருந்த போது, காவல்துறை அதிகாரி ஒருவர், அவர் ஏற்கனவே உள்ளே சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார். ஆனால் அவர் உள்ளே செல்லவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அமைச்சர் துரைமுருகன், அந்த காவல் அதிகாரியைக் கடிந்துக் கொண்டார்.
நள்ளிரவு 01.00 மணி வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!
இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.