திருத்தணி முருகன் கோயிலில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் ரொக்கமும், 382 கிராம் தங்கத்தையும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
பீகாரில் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடு உடன்பாடு!
முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற உண்டியலில் காணிக்கையாக தங்கம், வெள்ளி, வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவற்றைச் செலுத்தி செல்கின்றனர்.
தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு!
அவை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 22 நாட்களில் 1 கோடியே 5 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணம், 382 கிராம் தங்கம் மற்றும் 5 ஆயிரத்து 280 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.