ஆவடி ரயில்வே கால்வாயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விழுந்து சிக்கிய பசுமாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் போராடி மீட்டனர். மாட்டை மீட்கும் வரை அவ்வழியாக சென்ற ரயில் சிறிது நேரம் காத்திருந்து.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக 25 செ.மீ அளவிற்கு கன மழை பெய்தது.இந்தநிலையில் ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் ஆவடி நோக்கி செல்லக்கூடிய தண்டவாளம் அருகில் மாடு கத்தும் சத்தம் கேட்டுள்ளது. அருகில் இருந்த இரயில்வே பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தபோது மிகவும் குறுகிய கால்வாயின் உள்ளே பெரிய பசுமாடு சிக்கி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து அங்கிருந்த இரயில்வே பணியாளர்கள் ஆவடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவ்வழியே வந்த ரெயில்களை நிறுத்தினர்.பின்னர் குறுகிய கால்வாயில் உள்ளே சிக்கி இருந்த பசுமாட்டை மீட்க போராடினர்.
பிரக்ஞானந்தா தனது செஸ் : வழிகாட்டியான விஸ்வநாதன் ஆனந்தை வென்றாா்.
எனினும் மீட்பது கடினமான நிலையில் கால்வாயை அகலப்படுத்தி மாட்டின் கொம்பில் கயிற்றை கட்டி போராடி மீட்டனர்.இதனை தொடர்ந்து அந்த மாடு துள்ளி குதித்து ஓடியது. இதன் பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் அந்த தண்டவாளத்தில் கடந்து சென்றது. கால்வாயில் சிக்கி கொண்ட மாட்டை போராடி மீட்ட சம்பவம் நெகழ்சியை ஏற்படுத்தி உள்ளது. குறுகிய கால்வாயில் சிக்கி கொண்டு உயிருடன் போராடிய மாட்டை, உயிருடன் மீட்ட தீயணைப்பு துறையினருக்கு ரயில்வே பணியாளர்கள் கை தட்டி நன்றி தெரிவித்தனர்.