அஜித்தின் 63வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் குட் பேட் அக்லி. இந்த படத்தினை மார்க் ஆண்டனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே ஐதராபாத் பகுதியில் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
படமானது அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷாவும் மெயின் வில்லனாக பிரசன்னாவும் நடிக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் அர்ஜுன் தாஸ், சுனில், பிரபு போன்றோரும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது நகைச்சுவை நடிகர் யோகி பாபு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். இவர் வருகின்ற அக்டோபர் 15ஆம் தேதி குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இணைவார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
இருப்பினும் விரைவில் மற்ற நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.
நடிகர் யோகி பாபு ஏற்கனவே அஜித்துடன் இணைந்து வேதாளம், விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இனி ரொம்ப ஈஸி! 24/7 செயல்படும் ஆன்லைன் கோர்ட். வழக்கு அனுமதி, விசாரணை, தீர்ப்புகள் என அனைத்தும் ஆன்லைன் வாயிலாக…
ஆடுஜீவிதம் படத்திற்க்காக சிறந்த பின்னணி இசைக்கான HMMA விருதை வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளாா். பின்னணி…
அமரன் படத்தின் ஒரு காட்சியில் மொபைல் எண் ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. படத்தின் ஒரு காட்சியில் இடம் பெற்ற மொபைல் எண்னை…
இனி திரையரங்கு வளாகத்திற்குள் FDFS ( FIRST DAY FIRST SHOW) ரிவியூ கூடாது. இவை பல தரப்பட்ட மக்களின்…
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. காலையில் இருந்து பல மாவட்டங்களில் மழை…
சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக, விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்பட்டு வருகின்றன. நிர்வாக காரணங்களுக்காக, இந்த…